Skip to main content

Featured

சாய்பாபா அஷ்டோத்திரம்

  சாய்பாபா அஷ்டோத்திரசத நமாவளி 1. ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம: 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம: 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4.ஓம் சேஷ சாயினே நம: 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: 7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: 8.ஓம் பூதாவாஸாய நம: 9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: 10.ஓம் காலாதீதாய நம: 11.ஓம் காலாய நம: 12.ஓம் காலகாலாய நம: 13.ஓம் காலதர்பதமனாய நம: 14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: 15.ஓம் அமர்த்யாய நம: 16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம: 17.ஓம் ஜீவாதாராய நம: 18.ஓம் ஸர்வாதாராய நம: 19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம: 20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: 21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம: 22.ஓம் ஆரோக்யஷேமதாய நம: 23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம: 24.ஓம் ருத்திஸித்திதாய நம: 25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம: 26.ஓம் யோகஷேமவஹாய நம: 27.ஓம் ஆபத்பாந்தவாய நம: 28.ஓம் மார்க்கபந்தவே நம: 29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம 30.ஓம் ப்ரியாய நம: 31.ஓம் ப்ரீதிவர்தனாய நம: 32.ஓம் அந்தர்யாமினே நம: 33.ஓம் ஸச்சிதாத்மனே நம: 34.ஓம் ஆனந்தாய நம: 35.ஓம் ஆனந்ததாய நம: 36.ஓம் பரமேச்வராய நம: 37.ஓம் பரப்ரம்ஹணே நம: 38.ஓம் பர...

நோய் தீர்க்கும் திருநீற்றுப் பதிகம்

 

நோய் தீர்க்கும் திருநீற்றுப் பதிகம்


தொற்று நோயினை அகற்றும் திருநீற்று பதிகம்

தினமும் படித்து வர எத்தகைய நோயும் அகலும்....


மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே (1) 

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே (2)  
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே (3)
 


காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே (4) 
 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே (5)
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே (6)
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே (7)
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே (8)
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே (9)
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே (10)
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே (11)


அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

Comments