புழுக்கள் ஊர்வானவாகவும், நீர்வால் உயிரனமாகவும் பரிமாற்றமடைந்தன. பூச்சிகள் பறவைகளாக பரிமாற்றமடைந்து பின் விலங்குகள் தோன்றின.
நாள்பட விலங்கிலிருந்து மனிதன் பரிமாற்றம் அடைந்தான்.
அம்மனிதன் தன் பசிக்கு பழங்களை உண்டான்.பின் தன் பசி தீர்த்த மரங்களை வணங்கினான்.
தன் தாகம் தீர்க்க நீர் அருந்தினான்.தாகம் தீர்த்த நதியையும் வணங்கத் தொடங்கினான் மனிதன்.
இரவு வந்தது இருள் சூழ்ந்தது. நிலவு வந்தது சற்று வெளிச்சம் தந்தது. சூரியன் வந்தது விடியல் பிறந்தது.பகலும்இரவும் மாறிமாறி வருவதை கண்டவன். பகலவன் இருந்த பொழுதை பகல் என்றும்,இருள் சூழ்ந்த பொழுதை இரவு எனவும் கணக்கிட்டு, 

சூரியனையும் சந்திரனையும் கொண்டு காலத்தை கணிக்க ஆரம்பித்தார்கள்.பின் செவ்வாயை சேர்த்து தேவர்களுக்கும் அசுரர்களும் பலன் சொன்னார்கள்.
(இதற்கு சான்றாக திருஉத்திரகோசமங்கை திருக்கோவிலில் சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருக்கு மட்டுமே சந்நிதி உள்ளது).
வானியியல் ஆராய்ச்சி செய்து சுக்கிரன்,புதன்,குரு,சனி ஆகிய கிரகங்களை கண்டறிந்தார்கள்.அக்கிரகங்களுக்கு நட்சத்திரங்கள் மூலமாக சக்தி கிடைப்பதையும்,அச்சக்தி நட்சத்திரங்களுக்கு நட்சத்திரம் வேறுபடுவதையும் உணர்கிறார்கள்.பல நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்கின்றனர்.
அதில் 28 நட்சத்திரங்கள் மூலம் கிரகங்கள் பலம் பெறுவதை உணர்ந்து, அதன் வடிவங்களை அதற்கு பெயராக வைத்தனர்.
பின் 28 நட்சத்திரங்கள் 27 நட்சத்திரங்களாகின.
--தொடரும்.....
கௌதம் அகத்யா,
ஶ்ரீ அகத்யா குருபீடம்,
நெகமம்.9087982136
Comments